சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
9.012
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம் பண் - (பொது -திரைலோக்கிய சுந்தரம் ) |
Back to Top
கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9.012  
கருவூர்த் தேவர் - திரைலோக்கிய சுந்தரம்
பண் - (திருத்தலம் பொது -திரைலோக்கிய சுந்தரம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நீரோங்கி வளர்கமலம் நீர்பொருந்தாத் தன்மையன்றே ஆரோங்கிமுகம் மலர்ந்தாங் கருவினையேன் திறம்மறந்தின் றூரோங்கும் பழிபாரா துன்பாலே விழுந்தொழிந்தேன் சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [1] |
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயாநீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [2] |
அம்பளிங்கு பகலோன்பால் அடைபற்றாய் இவள்மனத்தின் முன்பளிந்த காதலும்நின் முகந்தோன்ற விளங்கிற்றால் வம்பளிந்த கனியேஎன் மருந்தேநல் வளர்முக்கட் செம்பளிங்கே பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [3] |
மைஞ்ஞின்ற குழலாள்தன் மனம்தரவும் வளைதாரா திஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்த தியார்செய்தார் மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [4] |
நீவாரா தொழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால் ஆவாஎன் றருள்புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும் தேவாதென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [5] |
முழுவதும்நீ யாயினும்இம் மொய்குழலாள் மெய்ம்முழுதும் பழுதெனவே நினைந்தோராள் பயில்வதும்நின் னொருநாமம் அழுவதும்நின் திறம்நினைந்தே அதுவன்றோ பெறும்பேறு செழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [6] |
தன்சோதி எழுமேனித் தபனியப்பூச் சாய்க்காட்டாய் உன்சோதி எழில்காண்பான் ஓலிடவும் உருக்காட்டாய் துஞ்சாக்கண் ணிவளுடைய துயர்தீரும் ஆறுரையாய் செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [7] |
அரும்பேதைக் கருள்புரியா தொழிந்தாய்நின் அவிர்சடைமேல் நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ் நரம்பாலும் உயிரீர்ந்தாய் நளிர்புரிசைக் குளிர்வனம்பா திரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [8] |
ஆறாத பேரன்பி னவர்உள்ளம் குடிகொண்டு வேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி அதுகொண்டு வீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம் தேறாள்தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [9] |
சரிந்ததுகில் தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை இருந்தபரி சொருநாள்கண் டிரங்காய்எம் பெருமானே முரிந்தநடை மடந்தையர்தம் முழங்கொலியும் வழங்கொலியும் திருந்துவிழ வணிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [10] |
ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும் காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை பூரணத்தார் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம் சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. | [11] |